சனி, 14 மே, 2016

KODAI JALAM at Srirangam Renganatha swamy temple

KODAI JALAM at Srirangam Renganatha swamy temple.

ஸ்ரீரெங்கனாதர் பள்ளி கொண்ட மூலஸ்தானம்
காயத்ரி மண்டபம். உட்பக்கம் சின்ன அகழி போல்
அமைப்பு. வெளிப்புறம் தொட்டி போல
ஒன்று. பக்கத்திலேயே கிணறு. ஸ்ரீரங்கம்
வந்தவர்களுக்குத் தெரியும். சேனை
முதலியார் சன்னிதிப் பக்கம் அந்தக் கிணறு
இருக்கிறது.
கிணற்றிலிருந்து நீர் எடுத்து தொட்டியில்
ஊற்ற வேண்டும். அதன் அவுட்லெட்டில்
களிமண் வைத்து அடைத்து வைத்திருப்பார்க
ள். ஊற்றும் தண்ணீர் உள்ளே போய்
மூலஸ்தானம் சுற்றி அணை கட்டினாற்போல
நிற்கும் இயற்கையாய் குளிர்ச்சி.
இரவு 10 மணிக்கு மேல் களிமண்ணை
நீக்கித் திறந்து விடுவார்கள். அதில் குளிக்க
ஒரு கூட்டம் வரும்.
நீர் இறைத்து ஊற்றுவது ஒரு ஜாலக்கான
வேலை.
கிணற்றில் அடி மட்டத்தில் இறங்கி ஒருவர்
காலை விரித்து வாகாக நிற்க, கிணற்றின்
நடுவே அதே போல ஒருத்தர். மேலே
வளைவில் அமர்ந்து மூன்றாவது ஆள்.
மண் பானை தான் நீர் எடுக்க. கிணற்றின்
விட்டம் இரண்டு ஆள் நிற்கும் அளவே. பானை
கீழே போய் நீருடன் மேலே வரும் வேகம்
என்னால் சொல்ல முடியவில்லை.
ஒரு தரம் கூட உடைந்ததில்லை. சர் சர்ரென்று
காலிப் பானை கீழே போய் நீருடன் மேலே
வரும் வித்தை பார்த்துக் கொண்டே
இருக்கலாம். சொட்டச் சொட்ட நனைந்து
விடுவோம்.
இது நடப்பது சேவை (தரிசனம்) நிறுத்தப்பட்ட
மதிய இடைவெளியில். அதனால் யாரும்
இருக்க மாட்டார்கள்.
உள்ளே கர்ப்பகிரகத்தில் அடுத்த பூஜைக்கான
ஏற்பாடுகள் அல்லது சற்றே ஓய்வு. அக்னி
நட்சத்திர நாட்களில் இது நடக்கும்.
வேலை முடிந்ததும் பானைகளை ஒரு ஜம்ப்
பண்ணி சேனை முதலியார் சன்னிதி மேல்
பகுதியில் உடையாமல் பத்திரமாய்
வைத்துவிடுவோம், மறு நாள்
உபயோகத்திற்கு..

ஞாயிறு, 8 மே, 2016

எந்த ஓரையில் என்ன செய்யலாம்

தின ஓரையில் பயன்கள் என்ன?

தின ஓரையில் பயன்கள்:  ஒவ்வொரு மாதமும் தினமும் அந்தந்த ஊர்களில் சூரியன் உதிக்கும் நேரம் முதல் ஒவ்வொரு மணி நேரம் வரையில் ஒவ்வொரு கிரகத்தினுடைய ஆதிபத்திய காலம் நடைபெறும். அதைத்தான் அந்த கிரகத்தின் ஆதிபத்தியம் உள்ள ஓரை என்று சொல்வர். எந்தக் கிழமையில் சூரிய உதயம் ஆகிறதோ, அந்தக் கிழமைக்கு உரிய கிரகமே சூரிய உதய முதல் ஒரு மணி நேரத்துக்கான ஓரைக்கு ஆதிபத்தியம் வகிக்கிறது.  உதாரணமாக திங்கட்கிழமை காலை 6 மணிக்கு சூரிய உதயமானால், அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையில் சந்திரனே ஆதிபத்தியம் செய்வதால், அது சந்திர ஓரையாகிறது. அடுத்தடுத்த ஒரு மணி நேரம் உரிய வரிசைப்படியான கிரகத்திற்கு உரியதாகிறது. அடுத்த நாள் செவ்வாய்க்கிழமை சூரிய உதயத்தின் போது செவ்வாய் ஓரை ஆரம்பாகிறது. இப்படியாக கிரக ஓரைகள் ஒரு வட்டம் போல ஒன்றையடுத்து மற்றொன்று என்று தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன. ராகுவும் கேதுவும் நிழல் கிரகங்கள் என்பதால் அவற்றுக்கு ஓரைகள் இல்லை. மாறாக ராகு காலம் என தனிக் காலம் உண்டு.
சூரிய ஓரை: விண்ணப்பம் செய்ய, அதிகாரிகளை சந்தித்தல், மருந்துண்ணல், சொத்துப் பிரிவினை செய்தல், வேலைக்கு முயற்சித்தல், அரசு அனுமதி பெறுதல், பதவி ஏற்றிடல் ஆகியன செய்யலாம்.
சந்திர ஓரை: திருமணத்துக்கு நாள் குறித்தல், பெண் பார்த்தல், ஆடை ஆபரணம் அணிதல், கல்வி கலை கற்றிட ஆரம்பித்தல், தொலைதூரப் பயணம் தொடங்குதல், கால்நடைகள் வாங்குதல் நலம் தரும்.
செவ்வாய் ஓரை: போர்க்கருவிகள் செய்தல், வாகனங்கள் பழுது பார்த்தல், போர் தொடுத்தால், வீடு மனை நிலம் வாங்குதல், விற்றல், மருந்துண்ணல், ஏரிக்கரை அல்லது அணை கட்டுதல் செய்யலாம். சுப காரியங்களைத் தவிர்ப்பது நல்லது.
புதன் ஓரை: ஜோதிட ஆராய்ச்சியில் ஈடுபடுதல், தேர்வு எழுதுதல், போட்டி பந்தயங்களில் பங்கேற்றல், கடிதத் தொடர்பு கொள்ளுதல், புதிய பொருள்களை வாங்குதல், புதிய கணக்கு ஆரம்பித்தல் செய்யலாம்.
குரு ஓரை: புதிய ஆடை ஆபரணம் வாங்குதல், அணிதல், சேமிக்கத் தொடங்குதல், வர்த்தகக் கொள்முதல் செய்தல், விதை விதைத்தல், நாற்று நடுதல், குரு உபதேசம் செய்தல், பெரியோர்களை சந்தித்து ஆசி பெறல் ஆகியவற்றுக்கு ஏற்ற காலம்.
சுக்கிர ஓரை: கலைகளைக் கற்கத் தொடங்குதல், திருமணத்திற்கான ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்தல், காதல் புரிதல், மருந்துண்ணல், பொருள் சேர்த்தல், கடன் வசூல் செய்தல், புதிய ஆடை ஆபரணம் அணிதல் செய்யலாம்.
சனி ஓரை: உழுதல், எருவிடுதல், இரும்பு, மின்சாதனங்களை வாங்குதல், தோப்பு துரவு (கிணறு) அமைத்தல், பயணம் செய்தல் போன்றவை செய்யலாம்

ஹிந்து வேதம் நமக்கு எத்தனை தாய் உள்ளனர் என்று கூறுகிறது

"ஏழு தாய்மார்கள்" :--

இப்பூமியில் பிறந்த அனைவருக்கும் ஏழு வகையான தாய்மார்கள் இருப்பது இயல்பே....

1. இவ்வுலகில் வாழ்வதற்கு   இந்த உடலைத் தந்தவர்.
2.  பூமித் தாய்
3. மாடு
4. செவிலித்தாய் (நர்ஸ்)
5. குரு பத்தினி
6. பிராமணரின் பத்தினி
7. மற்றும், ஒரு நாட்டின்  அரசி
"இனிய  அன்னையர் தின வாழ்த்துக்கள்"💗💗💗

வெள்ளி, 6 மே, 2016

Good story

One Day...Yamraja came to a Guy and said:

"Hey, today is your last day!"

Guy:  "But i'm not ready!".
:-) :-)

Yamraja said:  "Well today your name is the first on my list...".

Guy: "Okay, then why don't you take a seat and We will drink a COFFEE before we go?"

Yamraja: "All right..".

The Guy gave Yamraja some COFFEE  with sleeping pills in it.  Yamraja finished COFFEE and fell into a deep sleep!!!

The Guy took the list & removed his name from top of the list and put at the bottom of the list!

When Yamraja woke up he said to the Guy: "Because you have been so nice to me, now I will start my job  from the BOTTOM of the list.." !!!

Moral:

Whatever is written in your Destiny ...
Will never change... no matter how much u try....
So, in Bhagwad Gita- Shri Krishna Says:

"YOU DO AS PER YOUR DESIRES,
BUT THE RESULT IS WHAT I DESIRE !

DO AS I WOULD DESIRE YOU TO DO...
ONLY THEN WILL YOU ACHIEVE WHAT YOU DESIRE...

         ..^..
        ,(-_-),
  '\'''''.\'='-.
     \/..\\,'
        //"")
        (\  /
          \ |,
         ,,; ',
It's so meaningful .....do read and forward it .......😊😊

வேதத்தில் யுகங்களை பற்றிய தகவல்

கல்பகாலம்

இந்து சமய நூல்களில்கல்பகாலம் என்பது படைப்புக் கடவுள் பிரம்மனின் ஒரு பகலின் கால அளவைக் குறிக்கும்.

ஆயிரம் மகாயுகங்கள்

பதினான்கு மன்வந்தரங்கள்தொகு

ஒரு கல்பகாலத்திற்குள் பதினான்கு 'மனு'க்களும் பதினான்கு இந்திரர்களும் வந்து செல்கிறார்கள். 'மனு' என்பவர் பூமி அனைத்துக்கும் மன்னராவார். இந்திரன் தேவலோகத்திற்கு மன்னராவார். ஒரு மனுவின் காலம் 71 மகாயுகங்கள். இந்திரனின் கால அளவும் அவ்வளவே. இக்கால அளவிற்கு 'மன்வந்தரம்' என்று பெயர். இரு மன்வந்தரங்களுக் கிடையில் ஒரு இடைவேளை ('ஸந்தியா காலம்') நான்கு கலியுககால அளவு கொண்டதாக இருக்கும். அதாவது 17,28,000 மானிட ஆண்டுகள். 14 மன்வந்தரங்களும் முடிந்தவுடன் ஒரு இடைவேளை இருக்கும். ஆக, பிரமனின் ஒரு பகலில், 71 மகாயுகங்களும். 15 ஸந்தியாகாலங்களும் இருக்கும்.

14 மன்வந்தரங்கள் = 71 x 14 மகாயுகங்கள் = 994 மகாயுகங்கள்.15 ஸந்தியாகாலங்கள் = 15 x 17,28,000 ஆண்டுகள் = 6 x 43,20,000 ஆண்டுகள் = 6 மஹாயுகங்கள்.

ஆக பிரமனின் ஒரு பகலில் ஆயிரம் மகாயுகங்கள்.

மன்வந்தரங்களின் பெயர்கள்தொகு

மன்வந்தரங்கள் கீழேயுள்ள வரிசையின்படி ஒன்றன்பின் ஒன்றாக வரும். ஒவ்வொரு மன்வந்தரமும் அப்பொழுதுள்ள மனுவின் பெயரைத் தாங்குகின்றது. இப்பொழுது நடப்பது ஏழாவது மன்வந்தரமான வைவஸ்வத மன்வந்தரம். சூரியனுடைய மைந்தனான வைவஸ்வதர் இப்பொழுதுள்ள மனு. முதல் ஏழு மன்வந்தரங்கள் பின்வருமாறு.

சுவாயம்புவ மன்வந்தரம்சுவாரோசிஷ மன்வந்தரம்உத்தம மன்வந்தரம்தாமச மன்வந்தரம்ரைவத மன்வந்தரம்சாக்ஷுஷ மன்வந்தரம்வைவஸ்வத மன்வந்தரம்

தற்போதைய மன்வந்தரம் முடிந்தபின் வரப்போகும் ஏழு மனுக்களின் பெயர்களும் புராணங்களில் கூறப்பட்டிருக்கின்றன. அவை:

ஸாவர்ணிதக்ஷஸாவர்ணிபிரம்மஸாவர்ணிதர்மஸாவர்ணிருத்ரஸாவர்ணிதேவஸாவர்ணிஇந்திரஸாவர்ணி

இன்றைய மன்வந்தரம்தொகு

இன்றைய மன்வந்தரமான வைவஸ்வத மன்வந்தரத்தில் 27 மகாயுகங்கள் சென்றுவிட்டன. இப்பொழுது நடப்பது 28-வது மகாயுகம். இதனுள் மூன்று யுகங்கள் -- அதாவது, கிருதயுகம், திரேதாயுகம், துவபரயுகம் -- சென்றுவிட்டன. இப்பொழுது நடப்பது கலியுகம். இதனுள் கி.பி.2011க்குச்சரியான கலியுக ஆண்டு 5112-13.

இன்றைய கல்பம்தொகு

இப்பொழுது நடந்துகொண்டிருக்கும் கல்பம் அல்லது பிரம்மாவின் பகலுக்கு 'சுவேத வராஹ கல்பம்' என்று பெயர். இக்கல்பத்தினுள், 7-வது மன்வந்தரமான வைவஸ்வத மன்வந்தரத்தில், 28-வது மகாயுகத்தில், கலியுகம் நடந்துகொண்டிருக்கிறது.

பிரம்மாவின் இரவுதொகு

பிரம்மாவின் இரவில் இந்திரனோ, மனுவோ, பூலோகமோ எதுவும் இருக்காது. பிரம்மாவும் தூங்கும் நிலையில் இருப்பார். பிரம்மாவின் அடுத்த நாள் காலையில் அவர் மறுபடியும் முன்போல் படைப்பைத் தொடங்குவார். அந்த நாள் முடிவில் ஊழிக்கால சம்பவங்கள் நடந்து எல்லாம் இறைவனிடத்தில் ஒடுங்கும். இப்படி ஒவ்வொரு கல்பத்திலும் நடக்கும். இதுதான் புராணங்களில் சொல்லப்பட்டிருக்கும் பிரம்மாவின் வாழ்க்கை. இவ்விதம் 360 நாட்கள் கொண்ட ஆண்டுகளாக, நூறு ஆண்டுகள் இந்த பிரம்மா இருப்பார். அவர் ஆயுள் முடியும்போது, இன்னும் பெரிய பிரளயம் ஏற்பட்டு அவரும் இறைவனிடம் ஒடுங்குவார்.

மற்ற சில கல்பங்கள்தொகு

பிரம்மாவின் ஆயுட்காலம் 100 பிரம்ம ஆண்டுகள். அந்தக் காலத்தை இரண்டாகப் பிரித்து இரண்டு 'பரார்த்தங்கள்' என்று புராணங்களில் சொல்லப்படுகின்றன. இப்பொழுது முதல் பரார்த்தம் முடிந்து இரண்டாவது பரார்த்தத்தின் முதல் கல்பம் சென்றுகொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதற்குமுன் முடிந்து போன முதல் பரார்த்தத்தின் கடைசி நாள் 'பாத்ம' கல்பம் எனப்படும். முதல் பரார்த்தத்தின் முதல் நாள் 'பிராம்ம' கல்பம் எனப்படும். இவையிரண்டு கல்பத்தைப் பற்றியும் புராணங்களில் சில சம்பவங்கள் சொல்லப் பட்டிருக்கின்றன.

'பரார்த்தம்' என்ற சொல் கணிதத்தில் 1017 என்ற எண்ணைக் குறிக்கும். பிரம்மாவின் ஆயுட்காலத்தின் பாதியிலும் ஏறக்குறைய அத்தனை மனித ஆண்டுகளே எனப் புராணங்கள் கொள்கின்றன.ஆனாலும் கணக்கிட்டுப் பார்க்கும்போது இதில் வேறுபாடு தெரிகின்றது.

ஒரு மகாயுகம் = 432 x 104 மனித ஆண்டுகள்.ஒரு கல்பம் அல்லது பிரம்மாவின் ஒரு பகல் = 432 x 107 மனித ஆண்டுகள்.ஒரு பகலும் ஓரிரவும் சேர்ந்தது = 864 x 107 மனித ஆண்டுகள்இப்படி 360 நாட்கள் கொண்ட பிரம்மனின் ஓர் ஆண்டு = 360 x 864 x107 மனித ஆண்டுகள்இப்படி 50 பிரம்ம-ஆண்டுகள் = 50 x 360 x 864 x 107 .

இது ஏறக்குறைய 1014 x 1.5 மனித ஆண்டுகளாகின்றது. இது கணிதப்படிபரார்த்தம் ஆகாவிட்டாலும் இதையே பிரம்மனின் பரார்த்தம் என்று புராணங்கள் சொல்கின்றன.

ஆதாரம்தொகு

புராணங்களில் சொல்லப்பட்டுள்ளது ஓர் ஆதாரம். காலகதியின் ஒவ்வொரு அளவிற்குமுள்ள முடிவான ஆதாரம் அக்காலத்தில் வசித்தவர்களின் வாக்குமூலமே. இந்தியாவில் தொன்றுதொட்டு நடந்துவந்த மணம் முதலிய அத்தனை சுபகாரியங்களிலும், ஈமக்கிரியைகள் முதலிய அத்தனை அமங்கலச்சடங்குகளிலும் அன்றுள்ள நேரம் காலம் முதலிய கணக்கீடுகளைச் சொல்லாமல் ஒரு செயலும் நடந்ததில்லை என்பதால் சென்றகாலத்துக் கணக்கீடுகள் பஞ்சாங்கங்கள் என்று புழங்கப்படும் ஏடுகளில் குறிக்கப்பட்டு வருகின்றன எனக் கொள்ளலாம்.

உசாத்துணைகள்தொகு

ஸ்ரீமத் பாகவத மகாபுராணம், எட்டாவது ஸ்கந்தம், அத்தியாயம் 13, 14.

மேற்கோள்கள்தொகு

↑ ஸஹஸ்ரயுகபர்யந்தம் அஹர்யத் பிரம்மணோ விது: -- பகவத் கீதை 8 - 17