சனி, 14 மே, 2016

KODAI JALAM at Srirangam Renganatha swamy temple

KODAI JALAM at Srirangam Renganatha swamy temple.

ஸ்ரீரெங்கனாதர் பள்ளி கொண்ட மூலஸ்தானம்
காயத்ரி மண்டபம். உட்பக்கம் சின்ன அகழி போல்
அமைப்பு. வெளிப்புறம் தொட்டி போல
ஒன்று. பக்கத்திலேயே கிணறு. ஸ்ரீரங்கம்
வந்தவர்களுக்குத் தெரியும். சேனை
முதலியார் சன்னிதிப் பக்கம் அந்தக் கிணறு
இருக்கிறது.
கிணற்றிலிருந்து நீர் எடுத்து தொட்டியில்
ஊற்ற வேண்டும். அதன் அவுட்லெட்டில்
களிமண் வைத்து அடைத்து வைத்திருப்பார்க
ள். ஊற்றும் தண்ணீர் உள்ளே போய்
மூலஸ்தானம் சுற்றி அணை கட்டினாற்போல
நிற்கும் இயற்கையாய் குளிர்ச்சி.
இரவு 10 மணிக்கு மேல் களிமண்ணை
நீக்கித் திறந்து விடுவார்கள். அதில் குளிக்க
ஒரு கூட்டம் வரும்.
நீர் இறைத்து ஊற்றுவது ஒரு ஜாலக்கான
வேலை.
கிணற்றில் அடி மட்டத்தில் இறங்கி ஒருவர்
காலை விரித்து வாகாக நிற்க, கிணற்றின்
நடுவே அதே போல ஒருத்தர். மேலே
வளைவில் அமர்ந்து மூன்றாவது ஆள்.
மண் பானை தான் நீர் எடுக்க. கிணற்றின்
விட்டம் இரண்டு ஆள் நிற்கும் அளவே. பானை
கீழே போய் நீருடன் மேலே வரும் வேகம்
என்னால் சொல்ல முடியவில்லை.
ஒரு தரம் கூட உடைந்ததில்லை. சர் சர்ரென்று
காலிப் பானை கீழே போய் நீருடன் மேலே
வரும் வித்தை பார்த்துக் கொண்டே
இருக்கலாம். சொட்டச் சொட்ட நனைந்து
விடுவோம்.
இது நடப்பது சேவை (தரிசனம்) நிறுத்தப்பட்ட
மதிய இடைவெளியில். அதனால் யாரும்
இருக்க மாட்டார்கள்.
உள்ளே கர்ப்பகிரகத்தில் அடுத்த பூஜைக்கான
ஏற்பாடுகள் அல்லது சற்றே ஓய்வு. அக்னி
நட்சத்திர நாட்களில் இது நடக்கும்.
வேலை முடிந்ததும் பானைகளை ஒரு ஜம்ப்
பண்ணி சேனை முதலியார் சன்னிதி மேல்
பகுதியில் உடையாமல் பத்திரமாய்
வைத்துவிடுவோம், மறு நாள்
உபயோகத்திற்கு..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக